
ரேஸின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
இத்தனை மாதங்களில் தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார் அஜித். தற்போது ஐரோப்பாவில் நடக்கும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த ரேஸின் போது அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை. அவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் முழுமையாக பாதுகாப்புடன் உள்ளார் என அஜித் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்று ரேஸின்போது அவரது கார் ஓரிரு முறை விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!