
ஐஸ்வர்யா ராஜேசின் மகாராணி தோற்றம்
ஜூன் 24, 2021
Advertisement
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட்டில் மகாராணியாய் தோற்றமளிக்கிறார். இந்த போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!