வெப் தொடரில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா லக்ஷ்மி
ஆக 02, 2024
Advertisement
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழில் ‛ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன்" ஆகிய படங்களில் நடித்தார். இது அல்லாமல் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழில் தக் லைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் முதல் முறையாக தமிழில் உருவாகும் புதிய வெப் தொடரில் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இதனை அறிமுக இயக்குனர் இயக்குகிறார். யாலி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். மேலும், இந்த வெப் தொடரை சோனி லிவ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!