
சந்தானம் பிறந்தநாளில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் டீசர்
ஜன 21, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக பயணித்து வருகிறார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படம் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் நவீன் பாலி ஷெட்டி நடிப்பில் 2019ம் ஆண்டில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீ நிவாசா ஆத்ரேயா என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். மனோஜ் பிதா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் சந்தானத்தின் பிறந்த நாளான இன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசரை நடிகர்கள் ஆர்யா, ஜீவா ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள் இந்த டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!