100 மில்லியன் சாதனையைப் படைத்த ஆதி புருஷ் டீசர்
அக் 04, 2022
Advertisement
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிக்க ராமாயணக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு உள்ள படம் "ஆதி புருஷ்". இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வெளியிடப்பட்டது.
யு-டியுபில் 24 மணி நேரத்திற்குள் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் சேர்த்து சுமார் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கு நடிகர் ஒருவர் நாயகனாக நடித்துள்ள ஒரு படத்தின் டீசருக்கு இந்த அளவிற்கு பார்வைகள் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளிவந்த "ராதே ஷ்யாம்" படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. அதை "ஆதி புருஷ்" படம் முறியடித்துள்ளது.
24 மணி நேரத்தில் ஹிந்தி டீசர் 69 மில்லியன் பார்வைகளை, தெலுங்கு டீசர் இரண்டு யு டியுப் சேனல்களில் 14 மில்லியன், தமிழ் 8 மில்லியன், மலையாளம் 6 மில்லியன், கன்னடம் 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.53 மில்லியன் லைக்குகள் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளது.
இவ்வளவு வரவேற்பு கிடைத்திருந்தாலும் மறுபக்கம் இந்த டீசரை விமர்சித்து பல மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ்கள் கடந்த இரண்டு நாட்களாகப் பரவி வருகிறது. பிரபாஸை நடிக்க வைத்து ஒரு கார்ட்டூன் படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!