நடிகர் சத்யேந்திரா உடல் தகனம்
மே 30, 2026
Advertisement
சென்னை : ஹாலிவுட், ஜெர்மன் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த சத்யேந்திரா இறந்த நிலையில், இன்று(மே 30) அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகர் சத்யேந்திரா, 65, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். 15 குறும்படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு ஹாலிவுட் மற்றும் ஜெர்மன் மொழி படத்தில் நடித்துள்ளார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மொழிப் பெயர்ப்பாளர், விமர்சகர், ஆசிரியர் என பல்வேறு முகம் கொண்ட இவர், உடல்நிலை சரியின்றி கடந்த 28 ம் தேதி சென்னையில் காலமானார். இவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு குடும்ப உறவினர்கள் யாரும் இல்லாததால், உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று மாலை ‛உதவும் கைககள்" அறக்கட்டளை சார்பில், அண்ணாநகரில் சத்யேந்திரா உடல் தகனம் செய்யப்பட்டது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!