நலிந்த தயாரிப்பாளர்களின் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார்: ஆரி அறிவிப்பு
ஏப் 08, 2022
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் படம் "சிட்தி". இந்த படத்தை பயஸ் ராஜ் இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். ரமேஷ் நாராயணன் இசை அமைத்துள்ளர்.
சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் சிட்தி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது என்பது படத்தின் கதை.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் ஆரி பேசியதாவது: நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும், ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். நீங்கள் கேஜிஎப் ரசிகராக இருந்தாலும் ஓகே, பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் சரி படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்.
இவ்வாறு ஆரி பேசினார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!