ஆதாருக்கு யுஏ சான்றிதழ்
மே 10, 2022
Advertisement
வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் படம் "ஆதார்". அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கி உள்ளார்.
கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண் பாண்டியன், திலீபன், பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளம். அதை தொலைத்துவிட்ட ஒருவன் படும் துன்பங்களே படத்தின் கதை. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, யு /ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!