மலையாளத்தில் ரீமேக் ஆகும் ஆதார்
மே 22, 2024
Advertisement
கடந்த 2022ம் ஆண்டில் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், உமா ரியாஸ் கான், ரித்விகா, இனியா, திலீபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் "ஆதார்". ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் வெளியான படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஆதார் கார்டு இல்லாத ஒரு சாதாரண மனிதன் படும் அவஸ்தைகளைப் பற்றி இந்த படம் பேசியது. இதில் கருணாஸ் கதை நாயகனாக நடித்திருந்தார்.
தற்போது இந்த படம் மலையாளத்தில் ரீமேக் ஆகிறது. நடிகர் திலீஷ் போத்தன், "ஆதார்" படத்தின் தமிழ் பதிப்பில் அருண் பாண்டியன் நடித்த போலீஸ் ரைட்டர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அவரே படத்தை தயாரிக்கவும் செய்கிறார். கருணாஸ் கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. தமிழில் இயக்கிய ராம்நாத் பழனிக்குமார் மலையாளத்திலும் இயக்குகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!