
இறுதி கட்டத்தை எட்டிய வணங்கான்
செப் 09, 2023
Advertisement
பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்க இருந்த படம் "வணங்கான்". படப்பிடிப்பு துவங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பாலா தனது பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றால் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!