கிருஷ்ணா ஜோடியாக நடித்த மாடல் அழகி
ஜூலை 04, 2023
Advertisement
சின்னசாமி சினி புரொடக்ஷன் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரித்துள்ள படம் "ராயர் பரம்பரை". அறிமுக இயக்குனர் ராம்நாத் இயக்கி உள்ளார். கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் நடித்துள்ள கிருத்திகா மாடலிங் துறையில் முன்னணியில் இருக்கிறவர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படத்தின் அறிமுக விழாவில் பேசிய அவர் “இது எனக்கு முதல் படம். படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
கிருஷ்ணா பேசும்போது “கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இது தான். புல் ஹீயூமர் படம், நான் இதற்கு முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை. இயக்குநரை நம்பி தான் களம் இறங்கினேன். எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் நாயகி படம் தான் இருக்கும், நல்ல மாடல் நன்றாக நடித்துள்ளார்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!