
வைரலாகும் வலிமை பார்த்தவரின் கமெண்ட்
இப்படம் எப்படியிருக்கிறது என்பது பற்றி ராஜேஷ் வசானி என்பவர் இன்று காலை டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“ஜீ குழுவினருடன் "வலிமை" படம் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பாஸ்ட் அன்ட் பியூரியஸ் மற்றும் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய பதில், விரைவில் திரையில் தீயாக பரவ உள்ளது. போனிகபூரிடம் இருந்து ஒரு த்ரில்லர். உங்கள் மூச்சை உங்களிடமிருந்து அடித்துச் செல்லும். "புஷ்பா" ஆரம்பம் என்றால் "வலிமை" கிளைமாக்ஸ்"", என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராஜேஷ் வசானி என்பவர் போனிகபூருக்கு நெருக்கமானவர் என்கிறது திரையுலக வட்டாரம். நண்பரின் படம் என்பதற்காக அவர் பாராட்டவில்லை, உண்மையைத்தான் சொல்கிறார் என்றும் சொல்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!