
சமந்தாவுக்கு கோவில் கட்டிய ஆந்திர ரசிகர் - நாளை திறப்பு விழா
ஏப் 27, 2023
Advertisement
குஷ்பு, நயன்தாரா உள்பட பல நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே ஒரு கோயில் கட்டி இருக்கிறார். அந்த கோயிலில் சமந்தாவின் சிலையை வைத்திருக்கிறார். இந்த கோவில் ஏப்ரல் 28ம் தேதியான நாளை திறக்கப்பட இருப்பதாக ஒரு செய்தியை அந்த ரசிகர் வெளியிட்டு இருக்கிறார். சமந்தாவுக்காக அவர் உருவாக்கி உள்ள அந்த சிலையானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை சமந்தா, பிரதியுஷா என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருகிறார். அதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கோயிலை தான் கட்டி உள்ளதாகவும், இதுவரை தான் சமந்தாவை நேரில் சந்தித்ததில்லை என்றும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!