98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்
மார் 16, 2026
Advertisement
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்" படம் 6 விருதுகளை வென்றது. "அவதார் : பயர் அண்ட் ஆஷ்" திரைப்படம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும். அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. விருது வழங்கும் விழாவில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அதிக விருதுகள்
பால் தாமஸ் ஆண்டர்சனின் "ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்" திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட மொத்தம் 6 விருதுகளைக் குவித்து முதலிடம் பிடித்தது.
முதல் பெண்
சின்னர்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆட்டம் டூரால்ட் அர்காபாவ், ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
விருதுகள் விபரம்...
சிறந்த சர்வதேசத் திரைப்படம் : சென்டிமென்டர் வேல்யூ (நார்வே)
சிறந்த அனிமேஷன் படம் : கே பாப் டிமன் ஹன்டர்ஸ்
சிறந்த அசல் திரைக்கதை : ரையன் கூக்லர் (சின்னர்ஸ்)
சிறந்த தழுவல் திரைக்கதை : பால் தாமஸ் ஆண்டர்சன் (ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)
சிறந்த பின்னணி இசை : லுட்விக் கோரன்சன் (சின்னர்ஸ்)
சிறந்த பாடல் : "கோல்டன்" (கே பாப் டிமன் ஹன்டர்ஸ்)
சிறந்த படம் : ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்
சிறந்த இயக்குனர் : பால் தாமஸ் ஆண்டர்சன் (படம் : ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)
சிறந்த நடிகர் : மைக்கேல் பி.ஜோர்டான் (சின்னர்ஸ்)
சிறந்த நடிகை : ஜெஸ்ஸி பக்லி (ஹேம்னட்)
சிறந்த துணை நடிகர் : சீன் பென் (ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)
சிறந்த துணை நடிகை : ஏமி மேடிகன் (வெப்பன்ஸ்)
சிறந்த அனிமேஷன் குறும்படம் : தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்
சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : அவதார் : பயர் அண்ட் ஆஷ்" திரைப்படம்
சிறந்த ஒலி அமைப்பு : எப்1 திரைப்படம் வென்றது.
இந்திய கலைஞர்களுக்கு அஞ்சலி
இந்த ஆண்டின் "In Memoriam" பகுதியில் இந்தியத் திரையுலகின் ஜம்பவான்களான தர்மேந்திரா, மனோஜ் குமார், பி.சரோஜா தேவி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆஸ்கர் விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்கினார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!