செப்டம்பர் 25ல் 6 தமிழ் படங்கள் வெளியீடு
செப் 21, 2026
Advertisement
2026ம் ஆண்டில் கடந்த வாரம் வெளியான படங்களுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 160ஐக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 10 படங்கள் வெளியாகின. அவற்றில் ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றன. இருந்தாலும் வசூல் மிகச் சுமாராகவே இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முந்தைய வாரத்தில் வெளிவந்த "மண்டாடி" கடந்த சில தினங்களாகவும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இந்த வார வெள்ளிக்கிழமையான செப்டம்பர் 25ம் தேதி 6 படங்கள் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “அன்பில் அவன், டோரதி, இ1, லெனின் பாண்டியன், மீசைய முறுக்கு 2, தி கிராண்ட் மாஸ்டர்” ஆகிய படங்கள் இந்த வார வெளியீடாக வர உள்ளன.
கார்த்திக் சுப்பராஜ், இளையராஜா கூட்டணியில் "டோரதி" படம் இவற்றில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருக்கிறது. படத்தின் பாடல்கள், டிரைலர்கள் ரசிகர்களைக் கவர்ந்ததே அதற்குக் காரணம். இளையராஜா இசையமைத்து அவரது தம்பி கங்கை அமரன் கதையின் நாயகனாக நடித்துள்ள "லெனின் பாண்டியன்" படமும் மாறுபட்ட கதைக்களத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மீசைய முறுக்கு" படத்தின் முதல் பாக வெற்றிக்குப் பிறகு 9 வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகம் வருகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள "அன்பில் அவன்" படத்தின் டிரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. "தி கிராண்ட் மாஸ்டர், இ 1" ஆகிய படங்களும் ரசிகர்களைக் கவருமா என்பது படம் வந்த பிறகுதான் தெரிய வரும்.
முன்னணி நடிகர்கள் இல்லாமல் கதையை நம்பி, கதாபாத்திரங்களை நம்பி இந்த வாரத்திய படங்கள் இருக்கின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!