100 மில்லியன் கிளப்பில் இணைந்த ஆண்டிப்பட்டி கணவாக் காத்து
ஜூன் 26, 2023
Advertisement
சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து 2016ல் வெளிவந்த படம் "தர்மதுரை". இப்படத்தில் இடம் பெற்ற "ஆண்டிப்பட்டி கணவாக் காத்து" பாடல் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.
யுவன் இசையில் வெளிவந்த "மாரி 2" படப்பாடலான "ரவுடி பேபி" பாடல்தான் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள தமிழ் சினிமாப் பாடலாக உள்ளது. அந்தப் பாடல் 147 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் பட்டியலில் யுவன் இசையில் வந்த பாடல்களில் "ரவுடி பேபி" பாடல், "என்ஜிகே" படத்தில் இடம் பெற்ற " அன்பே பேரன்பே" பாடல், "டிக்கிலோனா" படத்தில் இடம் பெற்ற "பேரு வச்சாலும்" பாடல், ஆகிய மூன்று பாடல்கள் 100 மில்லியன் கிளப்பில் உள்ளன. இப்போது நான்காவது பாடலாக "ஆண்டிப்பட்டி கணவாக் காத்து" பாடல் சேர்ந்துள்ளது.
யு டியூபில் பாடல் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 100 மில்லியன் கிடைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!