
அக்டோபர் 6ல் 10 படங்கள் ரிலீஸ்
அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான அக்டோபர் 6ம் தேதி 10 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “800, தில்லு இருந்தா போராடு, என் இனிய தனிமையே, எனக்கு என்டே கிடையாது, இறுகப்பற்று, இந்த கிரைம் தப்பில்ல, மார்கழித் திங்கள், ஷாட் பூட் த்ரீ, ரத்தம், த ரோடு” ஆகிய 10 படங்கள் அன்றைய தினத்தில் வெளியாக உள்ளன.
இந்தப் படங்களில் எத்தனை வெளிவரும் என்பது வெளியீட்டிற்கு முந்தைய நாள்தான் தெரிய வரும். இது போல 10 படங்கள் வாரத்திற்கு வெளிவந்தால் 2023ல் வெளியான படங்களின் எண்ணிக்கை 300ஐத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!