சந்திரபாபு ஆன யோகேஸ்வரன்
மே 15, 2022
Advertisement
தமிழில் வெளியான ‛பிச்சைக்காரன்" சினிமாவில் ஒயின்ஷாப் காட்சியில் ‛டேய் எதுக்குடா பீர் அடிக்கற பசங்க எல்லாம் பாருக்கு வர்றீங்க. போற வழியில வூட்டாண்ட போர் தண்ணி குடிச்சுட்டு போக வேண்டியது தான..." என வசனம் பேசி ரசிகர்களின் பாராட்டை பெற்ற தேனி கோடாங்கிபட்டி யோகேஸ்வரன் 47. பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து பேசியதாவது...
முதல் வாய்ப்பு பற்றி
குடும்ப சூழ்நிலையில் கல்லூரி செல்லவில்லை. 1990ல் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்தபோது அங்கு பணிபுரிந்த மாஸ்டர் நிக்ஷன் ‛பிரேக் டான்ஸ்" கற்றுக் கொடுத்தார். சென்னை கோல்டன் கடற்கரையில் ‛வீக் எண்டு" நிகழ்ச்சியில் முதன்முதலில் மேடை ஏறி நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது.
யோகேஸ்வரன், ஈஸ்வர் சந்திரபாபு ஆனது எப்படி
சிறுவயதில் சென்னை வண்ணாரபேட்டைக்கு குடி பெயர்ந்தோம். ஊரடங்கிற்கு பின் மனைவி அமுதா, பிள்ளைகள் பாலாஜி, தனுஷ்காவுடன் கோடாங்கிபட்டியில் வசிக்கிறேன். நடன கலைஞராக திரைப்படங்களில் நடிப்பதற்காக யோகேஸ்வரன் என்ற பெயரை, ஈஸ்வர் சந்திரபாபு என மாற்றினேன்.
நடனக்குழுவில் வாய்ப்பு பெற்றது
1992ல் வண்ணாரப்பேட்டை கோயில் திருவிழாவில் நடிகர் சந்திரபாபுவின் தத்ரூப நடனம் ஆடினேன். வரவேற்பு கிடைத்தது. அதன்பின் ‛பிரி பேர்ட்ஸ்" நடனக்குழுவில் ராணிசீதா மன்றத்தில் ஆடினேன். அதில் இருந்து நாஞ்சில் மணிமாறனின் ‛புதியபூமி" நடனக்குழுவின் சார்பில், 3000 நடன மேடைகளில் சந்திரபாபுவின் நடனம் ஆடி ரசிகர்களின் ஆதரவை பெற்றேன்.
சினிமா வாய்ப்புகள் பற்றி
1993ல் இத்துறையில் நுழைந்தேன். அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‛நவாப்" படத்தில் நடித்தது முதல் வாய்ப்பு. பின், புது வசந்தம் தெலுங்கு ரீமேக் படம். தமிழில் வெளியான பிஸ்தா, உதவி இயக்குனர் செந்தில் மூலம் ‛குக்கூ" படத்தில் வாய்ப்பு, இயக்குனர் சசியின் மூலம் ‛பிச்சைக்காரன்" படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்த திரைப்பட வாய்ப்புகள்
‛குக்கூ" திரைப்படத்திற்கு பின் 20 படங்கள், கொரோனா ஊரடங்கிற்கு பின் 8 படங்களில் சோலோ டான்ஸ் ஆடி உள்ளேன். ‛டான்ஸ்" மாஸ்டர் தினேஷ் நடிக்கும் ‛கட்டிங்", வரலட்சுமி நடிக்கும் ‛அரசி" படம் விரைவில் வெளியாக உள்ளன. ‛தரை டிக்கெட்டு" உட்பட 6 படங்களில் நடித்து வருகிறேன்.
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து
சந்திரபாபுவின் சொந்த ஊரான தூத்துக்குடியை சேர்ந்த ஜான் இப்படத்தை தயாரிக்கிறார். அதில் சந்திரபாபுவாக நடிக்க என்னை தயார்படுத்தி வருகிறேன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!