
சூர்யவன்ஷி தீபாவளிக்கு தியேட்டரில் வெளியாகிறது
அக்ஷய்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் சூர்யவன்ஷி. இதில் அவருடன் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் நடித்துள்ளனர். ரோஹித் ஷெட்டி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாரான இந்தப் படம் ஊரடங்கு காரணமாக வெளிவரவில்லை. முழுமையாகத் திரையரங்குகள் திறப்பதற்குப் படக்குழு காத்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூர்யவன்ஷி தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பிறகு பாலிவுட்டில் தியேட்டரில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் இதுவாகும். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள், பாலிவுட் சினிமாவின் நிலை சீராகும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!