
ஹிந்தி படம் இயக்கும் மகேஷ் நாராயணன்
அவரது இரண்டாவது திரைபடமான சி யூ சூன் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. தேவர்மகன் 2வது பாகத்தை இவர் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மகேஷ் நாராயணன் ஒரு ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக 50 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது மகேஷ் நாராயணன் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். படத்திற்கு பான்ந்தோம் ஹாஸ்பிட்டல் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோசி ஜோசப் இந்தியாவின் சுகாதாரத்தை பற்றி ஆய்வு செய்து எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதனை தல்வார், ராஸி, பாஹ ஹோ படங்களை தயாரித்த ப்ரீத்தி ஷஹானி தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது: இந்திய சுகாதாரத் துறையில் நிகழ்ந்துள்ள ஊழல் சம்பவங்களை அடைப்படையாக கொண்டிருக்கும் இக்கதையை கேட்டதுமே, என்னை வெகுவாக ஈர்த்தது. ப்ரீதி ஷஹானி ஒரு தயாரிப்பாளராக தரமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார், அவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அவர்களின் மொழியில் எனது முதல் இந்திப் படத்தை இயக்க, நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!