
ஷாரூக்கான் படத்தில் நயன்தாராவுடன் இணைந்த ஹிந்தி நடிகை
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மற்றொரு நடிகையாக சான்யா மல்ஹோத்ரா என்பவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அமீர்கான் நடித்த "தங்கல்" திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!