
விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா நாளை ஓடிடியில்...
சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கார்கில் போரில் ஒரு கடினமான தாக்குதலலை பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தி தன்னுடைய 24 வயதிலேயே வீர மரணமடைந்த கேப்டன் விக்ரம் பாத்ராவின் பயோபிக்தான் இந்த "ஷெர்ஷா". பாகிஸ்தான் ராணுவத்தின் பேச்சுக்களில் அவர் "ஷெர்ஷா" எனக் குறிப்பிடப்பட்டவர். அந்தப் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்கள்.
இப்படத்தில் விக்ரம் பாத்ரா கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளார். விக்ரம் பாத்ரா, அவரது சகோதரர் விஷால் பத்ரா என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் சித்தார்த்.
கடந்த வருடம் தியேட்டர்களில் வெளியாகி இருக்க வேண்டிய படம். கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைத்தார்கள். தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.
கடந்த மாதம் யு டியுபில் வெளியான "ஷெர்ஷா" டிரைலருக்கு இதுவரையில் 4 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!