
தெலுங்கு ஹிட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பிரபுதேவா
இதனால் ஒரு வெற்றிப்படம் தந்து, தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. அதேசமயம் இனி நேரடி கதைகளை நம்பாமல், தனக்கு எப்போதும் கை கொடுக்கும் ரீமேக்கையே இந்த முறையும் கையில் எடுக்க உள்ளாராம் பிரபுதேவா.
அந்தவகையில் ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான ஒரு படத்தை தான் ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா ஏற்கனவே வாங்கியுள்ளார். இதன் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள், இது எந்த படத்தின் ரீமேக் என்பது குறித்து, தற்போதைக்கு படத்தின் தயாரிப்பாளரும், பிரபுதேவாவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்களாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!