
படங்கள் குவிவதால் திடீரென சம்பளத்தை உயர்த்திய டாப்சி
ஹிந்தியில் பிங்க், பத்லா, நாம் சபானா, மிஷன் மங்கள், தப்பட் போன்ற படங்களில் நடித்து பிசியாகிவிட்டார். டாப்சியின் நடிப்பு ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் "டூ-பாரா", "லூப் லாபெட்டா", மற்றும் "சபாஷ் மித்து" உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கங்கணா ரனாவத் வரிசையில் டாப்சியும் இடம் பிடித்துவிட்டார். இவர்கள் அனைவருமே, நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அசத்தியும் வருகிறார்கள். இதுவரை குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த டாப்சி, படங்கள் குவிவதால் தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!