
கோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்
கடந்த 15 வருடங்களாக இந்தி திரையுலகில் மிக முக்கியமான இடத்தில் இருந்து வருபவர் நடிகை கத்ரீனா கைப். இவர் தற்போது 15 லட்சம் ரூபாய் மாத வாடகையில் கடலை பார்த்தபடி உள்ள அபார்ட்மென்ட்டில் உள்ள பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், கடந்த வருடத்தில் இருந்து, மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் 8.25 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து குடியிருந்து வருகிறார்
பாலிவுட்டில் இன்னொரு முன்னணி நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் 5 பெட்ரூம் கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றில், 6.78 லட்சம் வாடகை கொடுத்து குடியிருந்து வருகிறார். அதேபோல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், வாடகைக்கு வீடு தேடி, கிடைக்காமல் ரொம்பவே சிரமப்பட்டார் அந்த சமயத்தில் அவருக்கு கைகொடுக்கும் விதமாக நடிகை செலினா ஜெட்லி, தனக்கு சொந்தமான மூன்று படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட்டை சன்னிலியோனுக்கு வாடகைக்கு கொடுத்தார். இருந்தாலும் தற்போது சன்னி லியோன் அபார்ட்மெண்ட் ஒன்றில் 12வது மாடியில் 4000 சதுர அடி கொண்ட பிளாட் ஒன்றை வாங்கி விட்டாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!