
மலையாள விருது நடிகருக்கு அமிதாப்புடன் நடிக்க வாய்ப்பு
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் "மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது பெற்றவர் தான் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிருத்விராஜூடன் இணைந்து நடித்த "அனார்கலி" படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சுதேவ் நாயர், தற்போது நிவின்பாலி நடித்து வரும் துறைமுகம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்தப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தொப்பை வளர்த்த சுதேவ் நாயர் அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட, அது வைரல் ஆனது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!