
விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆமீர்கான் ஆர்வம்
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட செக்மேட் கோவிட் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபலங்கள் சிலர் விஸ்வநாதன் ஆனந்துடன ஆன்லைன் மூலமாக செஸ் விளையாடினார்கள். அதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் அவருடன் செஸ் விளையாடினார். அப்போது விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டபோது ஆமீர்கான் கூறியதாவது:
விஸ்வநாதன் ஆனந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கவுரவம், மகிழ்ச்சி. அப்படி நான் நடித்தால் அவரது எண்ணங்களை என மனதில் ஏற்றிக் கொள்வேன். அது இன்னும் உற்சாகத்தை தரும். அவரோடு நிறைய நேரம் செலவிட்டு அவரது மன ஓட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வேன். அவரது குடும்பத்தினரிடமும் பேசி அவரைப் பற்றித் தெரிந்துகொள்வேன். அதன் பிறகு திரையில் அவரைப் போல நடித்து ஆச்சரியப்படுத்துவேன் . எனவே அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். என்று ஆமிர் கான் பதிலளித்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!