
பாலிவுட் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்
தனது சோஷியல் மீடியா பக்கத்தில் “நீங்கள் எப்போது எதைச் செய்தாலும் அதில் தொடர்ந்து பிரகாசிப்பார்கள். இந்த வருடம் உங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.. மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இத்தனைக்கும் விக்கி கவுசல், கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்தது இல்லை.. இதற்கு முன்பு அவர்களுக்கு பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொண்டது இல்லை. கடந்த 2019ல் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் மகாநடி படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்ற அதேசமயம், விக்கி கவுசல் உரி ; தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். அப்போது நேரில் பார்த்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டது தான் அவர்களது ஒரே சந்திப்பு.
ஆனாலும் இரண்டு வருடங்களாக சோசியல் மீடியாவில் அவர்களது நட்பு தொடர்ந்து வருவது கீர்த்தி சுரேஷின் இந்த பிறந்தநாள் வாழ்த்து மூலம் உறுதியாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!