
ஹிந்தி இசையமைப்பாளர் ஷ்ராவன் கொரானோவால் மரணம்
90களில் நதீஷ்ம் - ஷ்ராவன் இசையமைத்த பல படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. “சாஜன், தில் ஹை கி மன்தா நகின், தீவானா, தட்கன், பர்தேஸ், ஆஷிகி, கசூர், ராஸ், ஹம் ஹைன் ரஹி பியார் கே, தில்வாலே, ராஜா, ராஜா ஹிந்துஸ்தானி,” ஆகிய படங்கள் அவர்கள் இசையமைத்த முக்கிய படங்கள்.
ஷ்ராவன் மறைவுக்கு ஹிந்தி சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், “நமது இசையுலகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். மரியாதையும், பிரார்த்தனைகளும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்து இசையமைத்து வந்த நதீம் - ஷ்ராவன் ஆகியோர் ஆறு வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக இசையமைக்க ஆரம்பித்தனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!