
கொரோனா 2வது அலை: சூர்யவன்ஷி வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு
கொரோனா தளர்வுகள் அமுலுக்கு வந்தாலும் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டருக்கு கூட்டம் வராத காரணத்தால், சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதோடு மூவருமே போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
ஏப்ரல் 30ம் தேதி சூர்யவன்ஷி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையாவிட்டால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!