
அய்யப்பனும் கோஷியும் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
தற்போது இந்தப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் பிறமொழி ரீமேக் உரிமத்தை போனி கபூர் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கில் இதன் ரீமேக் பணிகள் தொடங்கி விட்டது. இதில் ராணா, பவன் கல்யாண் நடிக்கிறார்கள்.
ஹிந்தி ரீமேக் பணிகளும் தொடங்கி உள்ளது. இதில் அபிஷேக் பச்சனும், ஜான் ஆபிரஹாமும் நடிக்கிறார்கள். மிஷன் மங்கல் படத்தை இயக்கிய ஜெகன் ஷக்தி இயக்குகிறார். ஜூலை மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹிந்திக்காக கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு படமாக்கப்பட இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!