
திருமணமான ஆண்களைக் காதலிக்க வேண்டாம் - நீனா குப்தா
பல வருடங்களுக்கு முன்பு விவியன் மீது ஆசைப்பட்டு அவரைக் காதலித்தார் நீனா. ஆனால், திருமணமே செய்து கொள்ளாமல் அவர் மூலம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். தற்போது நீனாவின் மகள் மசாபா குப்தா டிசைனர் ஆக இருக்கிறார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தனது ரசிகைகளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார் நீனா. “எனது மகள் திருமணமாகாத பெற்றோருக்குப் பிறந்த காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டாள். திருமணமான ஆண்கள் மீது காதல் கொள்ள வேண்டாம். இதற்கு முன்பு நான் அப்படிச் செய்து, அதனால் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் இதைப் பற்றி நான் சொல்கிறேன்,” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தற்போது 61 வயதாகும் நீனா குப்தா, 13 வருடங்களுக்கு முன்பு விவேக் மெஹ்ரா என்ற ஆடிட்டரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!