
கதை திருட்டு வழக்கில் சிக்கிய கங்கனா
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். டிட்டாவின் கதை என்னிடம் உள்ளது. அந்த கதையை தெரிந்து கொண்டு அதை கங்கனா சினமாவாக்க முயற்சிப்பதாக பிரபல இந்தி எழுத்தாளர் ஆஷிக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கங்கனா மீது கதை திருட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டா என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன். கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!