
ஆபாச படம் தயாரித்த நடிகை கைது
கொரோனா ஊரடங்கு காலத்தில் யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கினார் கெஹனா. இந்த சேனலுக்கு மாதம் 2 ஆயிரம் கட்டணம் வசூலித்தார். காரணம் அந்த சேனலில் அவர் நடித்துள்ள ஆபாச படங்கள் மட்டுமல்லாது வாரத்திற்கு 3 ஆபாச படங்களை தயாரித்தும், அதையும் பதிவேற்றம் செய்தும் வந்துள்ளார். அரை நிர்வாண படங்களுக்கு ஒரு கட்டணம், முழு நிர்வாண படங்களுக்கு தனி கட்டணம் என்று வசூலித்துள்ளார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மும்பை மலாட் மல்வாணி பகுதியில் கெஹனா குடியிருந்த பங்களாவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஆபாச படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகள், கேமரா மேன், இயக்குனர் கைது செய்யப்பட்டனர். கெஹனாவையும் போலீசார் கைது செய்தனர். இதுவரை அவர் 87 ஆபாச படங்கள் எடுத்து அதனை பதிவேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!