
இதுதான் பேஷன் : பாலிவுட் நடிகையின் அதிரடி
ஹிந்தித் திரையுலகத்தில் சில படங்களில் நடித்துள்ள மாடல் அழகி ஊர்வசி ரவுட்லா, ஏற்கெனவே கன்னடப் படம் ஒன்றிலும் நடித்துவிட்டார். அடுத்து தெலுங்குப் படம் ஒன்றிலும் அறிமுகமாக உள்ளார்.
தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிடும் வழக்கம் உடையவர் ஊர்வசி. அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 33 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதிலேயே அவருடைய பிரபலம் என்ன என்பது புரிந்திருக்கும்.
நேற்று தன்னுடைய இன்ஸ்டாபக்கத்தில் "பம் ரிப் ஜீன்ஸ்" அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. "பம் ரிப் ஜீன்ஸ்" என்பது பின்புறத்திலும் ஆங்காங்கே கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் ஆடை. என்னுடைய லேட்டஸ்ட் பேஷன் இது என சில புகைப்படங்களைப் பதிவிட்டு தன் இன்ஸ்டா பக்கத்தை சூடற்றியிருக்கிறார் ஊர்வசி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!