
அஜய் தேவ்கன் ராணுவ அதிகாரியாக நடிக்கும் சவுஹான்
நீரஜ் யாதவ் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். காஷ்மீரின் புல்வாமா பின்னணியில் நடக்கும் அரசியல் மற்றும் ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் அஜய் தேவ்கன் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் குறித்து வெளியிடப்பட்ட டீசரில், "பதான்களிடம் சொல்லுங்கள், சவுஹான் வந்து கொண்டிருக்கிறான்" என்ற வசனம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!