
என்னிடம் தெரிவிக்காமலேயே 30 வயது அதிகமான நடிகருக்கு ஜோடி ஆக்கினார்கள் : மிருணாள் தாக்கூர் வருத்தம்
இந்த படத்தில் இவர் கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவியாகவும் அதேபோல நடிகர் அஜய் தேவ்கன் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்பவராகவும் இவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம் நட்பு குறித்தும் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் மிருணாள் தாக்கூரின் முன்னாள் கணவராக பாலிவுட் சீனியர் நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியாகியுள்ள டகாய்ட் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில், சன் ஆப் சர்தார் 2 படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் மிருணாள்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ”அந்தப் படத்தில் எனக்கு கணவராக ஜோடியாக சீனியர் ஒருவரை தான் (சங்க்கி பாண்டே - 63 வயது) தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம்.. இது பற்றிய தகவல் எதையும் எனக்கு படக்குழுவினர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஆனாலும் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தினால் எந்தவித இடைஞ்சலும் செய்யாமல் அந்த படத்தில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!