
முடிவுக்கு வரும் துரந்தர் 2 வசூல்
இந்தியாவில் மொத்த வசூல் 1315 கோடிகளையும், நிகர வசூல் 1100 கோடிகளையும் கடந்துள்ளது. வேறு எந்த இந்திய படமும் செய்யாத நிகர வசூலாக 1100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. வெளிநாடுகளில் 415 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இந்தப் படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. நாளை முதல் அக்ஷய் குமார் நடித்துள்ள "பூத் பங்களா" படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரிவியூ காட்சிகளைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு மேல் "துரந்தர் 2" வசூல் குறையவே வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்தப் படம் 1800 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ள "பாகுபலி 2" வசூலை நெருங்க வாய்ப்பில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!