
இந்தியாவில் 1000 கோடி வசூலைக் கடந்த துரந்தர் 2
உலக அளவில் மொத்தமாக 1365 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. அதில் இந்திய வசூல் 1023 கோடி, வெளிநாட்டு வசூல் 342 கோடி. இந்திய அளவில் 1000 கோடி வசூலைப் பெற்ற 5வது படமாக இந்தப் படம் இடம் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு வெளியான படங்களில் 1400 கோடியுடன் "பாகுபலி 2" படம் முதலிடத்திலும், அடுத்து இரண்டாவது இடத்தில் 1300 கோடியுடன் "புஷ்பா 2", மூன்றாவது இடத்தில் 1050 கோடியுடன் "துரந்தர் 1" படமும், 1000 கோடி வசூலுடன் "கேஜிஎப் 2" படம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன என பாக்ஸ் ஆபீஸ் தகவல் உள்ளது.
திட்டமிட்டபடி மற்ற தென்னிந்திய மொழிகளில் இப்படம் அதே மார்ச் 19ல் வெளிவந்திருந்தால் இந்த வசூல் இன்னம் அதிகரித்திருக்கும். ஹிந்தியில் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அடுத்தடுத்து மற்ற மொழிகளில் படங்களை வெளியிட்டார்கள்.
நேற்றைய வசூலுடன் "துரந்தர் 1" படத்தின் மொத்த உலக வசூலை "துரந்தர் 2" முறியடித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!