துரந்தர் படம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் : ஆதித்யா தர்
மார் 11, 2026
Advertisement
ஹிந்தியில் உரி பட இயக்குனர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து திரைக்கு வந்த படம் " துரந்தர்" . உலகளவில் ரூ. 1400 கோடி வசூலை கடந்தது. ஹிந்தி பதிப்பில் மட்டும் திரைக்கு வந்த இந்த படம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை செய்தனர். இதையும் மீறி தான் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இரண்டாம் வரும் மார்ச் 19ல் ரிலீஸாகிறது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
தற்போது ஆதித்யா தர் ஒரு பேட்டியில் கூறியதாவது, "துரந்தர் படம் பயங்கரவாதம் பற்றிய படம் மட்டும் தான். எந்தவொரு நாட்டையும், மக்களையும் பற்றியது இல்லை. பாகிஸ்தான் சினிமா ரசிகர்களும் இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் விரும்புவார்கள். இந்த படத்திற்கு தடை இருந்த போதும் நல்ல வரவேற்பு பெற்றது" என தெரிவித்துள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!