
சாரக் படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு
இந்தப் படத்தை இயக்கிய சுதிப்டோ சென் தற்போது "சாரக்" என்ற படத்தை தயாரித்துள்ளார். இதை ஷீலாதித்ய மவுலிக் இயக்கியுள்ளார். இப்படம் இந்து வழிபாட்டில் உள்ள அமானுஷ்ய நடைமுறைகளை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அதில் நரமாமிச விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.
இதுபற்றி சுதிப்டோ சென் கூறும்போது, “என் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை. இது கற்பனையான படம் அல்ல. ஆவணப்படுத்தப்பட்ட விஷயங்களையே படமாக்கி இருக்கிறோம். சில வெட்டுக்களை, சில காட்சிகளை நீக்க தயாராக இருக்கிறேன். ஆனால் சான்றிதழ் தராததற்கான காரணம் தெரியவில்லை. உண்மை எப்போதும் கசப்பாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!