
வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா
அந்தக் கால கதாநாயகியாக ஜெயஸ்ரீயை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் சாந்தாராம். தற்போது ஹிந்தியில் வி சாந்தாராம் பற்றிய பயோபிக் படத்தை உருவாக்கி வருகிறார்கள். "வி சாந்தாராம் - த ரெபெல் ஆப் இந்தியன் சினிமா" என்ற தலைப்பிட்டுள்ள அப்படத்தை அபிஜீத் ஷிரிஷ் தேஷ்பாண்டே இயக்க, வி சாந்தாராம் கதாபாத்திரத்தில் சித்தாந்த் சதுர்வேதி நடிக்க, ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார். அவர்களது தோற்றப் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
பழமையும் புதுமையும் கலந்த போஸ்டர்களாக அமைந்துள்ள அவையிரண்டும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்போஸ்டர்களுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!