
நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம்
ஹேமமாலினி வெளியிட்ட பதிவில், ‛‛தரம்ஜீ(தர்மேந்திரா), அன்பான கணவர், இரு பெண்களின்( இஷா, அஹானா) அப்பா, நண்பர், ஞானி, வழிகாட்டி, கவிஞர் என எனக்கு எல்லாமுமாக நீங்கள் இருந்தீர்கள். தன் எளிமையான, நட்பு ரீதியான பழக்க வழக்கங்களால் என் குடும்பத்தின் அனைவரையும் கவர்ந்தவர். எல்லோரிடமும் பாசமும் ஆர்வமும் காட்டியவர்.
பிரபலமாக இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் அவரது திறமையும், பணிவு, எல்லோரையும் சென்றடையும் ஈர்ப்பு ஆகியவை அவரை எல்லா நாயகர்களிலும் தனித்து நிற்கும் ஒப்பற்ற சின்னமாக ஆக்கின. திரைத்துறையில் அவரது நிலையான புகழும் சாதனைகளும் என்றென்றும் நீடிக்கும்.
எனது தனிப்பட்ட இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடம் என் வாழ்நாள் முழுவதும் நிரப்பப்பட மாட்டாத ஒன்று . பல ஆண்டு இணைந்த வாழ்வுக்குப் பிறகு, எண்ணற்ற நினைவுகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அந்த அத்தனை சிறப்பான தருணங்களையும் மீண்டும் மீண்டும் வாழ்வதற்காக…"" என உருக்கமாக குறிப்பிட்டு, அவருடன் இருந்த போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!