
அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர்
புகழ்பெற்ற ஜூடி ஹாப்ஸ் கேரக்டருக்கு டப்பிங் பேசியிருப்பது குறித்து ஷ்ரத்தா கபூர் கூறும்போது "ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்து கொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி.
அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும் கூலாகவும் இருக்கும் கதாபாத்திரத்திற்கு நான் குரல் கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவளுக்குப் பொருந்தும்படி என் குரலை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அவள் கோபம், வேடிக்கை என எல்லாவற்றையும் கவனித்து அதற்கேற்ப குரல் கொடுத்தேன். உண்மையிலேயே அந்தக் கதாபாத்திரத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று விரும்பி அதையே செய்தேன்" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!