
ஹிந்தியில் ரீமேக் ஆகும் அருந்ததி கதையின் நாயகி யார் தெரியுமா?
கடந்த 2009ம் ஆண்டில் தெலுங்கில் கொடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து வெளியான படம் "அருந்ததி". அந்த காலகட்டத்தில் குறைவான பொருட்செலவில் உருவாகி பல மடங்கு வசூலை வாரி குவித்த படம். அந்த சமயத்தில் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தை ஹிந்தியில் மோகன் ராஜா இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கவுள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!