
காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு
ராஜஸ்தானை சேர்ந்த கீர்த்தி சிங் என்ற பெண் 2022ல் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் காரை வாங்கி உள்ளார். 6 மாதத்திற்குள் இந்த காரில் நிறைய பிரச்னைகள் வந்ததாக தெரிகிறது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதோடு அந்த காரை விளம்பரப்படுத்திய பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். பரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!