
வரவேற்பைப் பெறாத பரியேறும் பெருமாள் ஹிந்தி ரீமேக்
ஷாஸியா இக்பால் இயக்கத்தில், சித்தாந்த் சதுர்வேதி, டிரிப்டி திம்ரி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். இந்தப் படம் முடிந்து கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டியது. வெளியீடு அறிவிக்கப்பட்டு சில முறை தள்ளி வைக்கப்பட்டது. சென்சார் பிரச்சனை வேறு படத்தைத் தாமதப்படுத்தியது. அனைத்தையும் தீர்த்து ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட்டார்கள்.
ஆனால், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதுவரையில் 15 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதாம். கடந்த மாதம் வெளிவந்த "சாயாரா" படத்தின் வெற்றிப் புயலில் "தடக் 2" படமும் சிக்கிக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த வாரம் வெளியான "சன் ஆப் சர்தார் 2" படமும் 40 கோடி வசூலையே நெருங்கியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!