
வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா?
அதில் கதாநாயகன் ஹிருத்திக் ரோஷனுக்கு 48 கோடி சம்பளம் என்றும் அதேசமயம் அதில் வில்லனாக நடித்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி கியாரா அத்வானிக்கு 15 கோடியும், இயக்குனர் அயன் முகர்ஜிக்கு 32 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு கதாநாயகனை விட முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையும் அங்குள்ள ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!