
எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம்
இந்தியாவில் இந்த படம் ஆங்கிலத்துடன் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்தில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயா தன்வந்திரி நடித்திருந்த முத்தக் காட்சிகளை நீக்கி விட்டனர்.
இதுகுறித்து ஷ்ரேயா தன்வந்திரி தணிக்கை குழுவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வெளியான "சூப்பர்மேன்" படத்தில் 33 வினாடிகள் ஓடக்கூடிய எனது முத்தக்காட்சியைத் தணிக்கை குழு நீக்கியுள்ளது முட்டாள்தனமானது. விரும்புவதைப் பார்த்து ரசிக்கக்கூட ரசிகர்களுக்கு உரிமை கிடையாதா? இப்படி செய்வது அநியாயம். வயதான நடிகர்கள், இளம் நடிகைகளுடன் காதல் செய்யலாம். ஆனால் நடிகைகள் வயதாகிவிட்டால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்தப்போக்கு சினிமாவில் மாறவேண்டும். என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!