
77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது
கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தான் ஆலியா பட்டுக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக செலவு கணக்குகளில் பணத்தை கையாடல் செய்து ஆலியா பட்டின் கையெழுத்தையும் முறைகேடாக பயன்படுத்தி இந்த பணத்தை எல்லாம் தனது நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு செல்லுமாறு மாற்றி அதன்பிறகு தனது வங்கி கணக்கிற்கு அதை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார் வேதிகா ஷெட்டி.
இந்த மோசடியை ஆலியா பட்டின் தாய் சோனி ரஸ்தான் கண்டுபிடித்து மும்பை ஜூஹு போலீஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தார். ஆனால் இதைத் தொடர்ந்து தலைமறைவான வேதிகா அதன்பிறகு ராஜஸ்தான், கர்நாடகா, அங்கிருந்து புனே இறுதியாக பெங்களூரு சென்று மாறி மாறி போலீசாரை அலைக்கழித்தார், ஒரு வழியாக தற்போது பெங்களூரில் அவர் இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவிடம் இரண்டு வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்த போதும் இப்படி மோசடி செய்து பணம் கையாடல் செய்துள்ளார் என்று இவரது இந்த கைது நடவடிக்கைக்கு பின்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் தாயார் மீரா ரவுட்டேலா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!